இணையும் விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடி?
11 Apr 2024
கோகுல் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள படத்துக்கும் நாயகியாக மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு நாயகியாக மமிதா பைஜு நடித்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இந்தப் படத்தினை முடித்துவிட்டு, கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஷ்ணு விஷால். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘கொரோனா குமார்’ கதையினை விஷ்ணு விஷாலுக்கு தகுந்தாற் போல் மாற்றிவிட்டார் கோகுல்
மேலும், தற்போது தயார் செய்துள்ள கதைக்கு ‘வைப் குமார்’ என தலைப்பிட்டுள்ளார். இதன் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
Tags: vishnu vishal, mamitha baiju