மீண்டும் இணையும் விஷால் – ஹரி கூட்டணி
11 Apr 2024
‘ரத்னம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் விஷால் – ஹரி கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.
ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரத்னம்’. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மே 26-ம் தேதி வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறது படக்குழு.
’ரத்னம்’ படத்தினை முடித்துவிட்டு, ‘துப்பறிவாளன் 2’ படத்தினை இயக்கி, தயாரித்து, நாயகனாக நடிக்கவுள்ளார் விஷால். இதற்கான பணிகளைத் தான் கவனித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் யாரெல்லாம் நடித்தார்களோ, அவர்களையே இதிலும் நடிக்க வைக்கவுள்ளார். இதன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
‘துப்பறிவாளன் 2’ முடித்துவிட்டு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் விஷால். இதுவும் ஹரி பாணியிலான கமர்ஷியல் கதை தான். ‘ரத்னம்’ படப்பிடிப்புலேயே இந்தப் படத்தின் கதையினைச் சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார் ஹரி.
மீண்டும் விஷால் – ஹரி கூட்டணி இணையும் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
Tags: vishal, hari, ratnam