விஜய்யை விரைவில் இயக்குவேன் - விஷால் 

13 Dec 2022

விஷால் நாயகனாக நடிக்க ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லத்தி. வரும் 22ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

அறிமுக இயக்குனர் ஆர்.வினோத் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 

நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஓய்வு காவல்துறை அதிகாரி ஜாங்கிட் அவர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் நடிகர் விஷால் பேசும்போது,

லத்தி திரைப்படம் நான்கு மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய விழாவில் நான் வழக்கமாக செய்யும் செயல் இது. சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வீண் விரய செலவு. அந்த பணத்தில் இரண்டு குழுந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுப்பது வழக்கம். இன்றும் அதைத்தான் செய்திருக்கிறேன்.
 
ஜாங்கித் சாருக்கு கான்ஸ்டபிள் சல்யூட் செய்கிறேன். பல நூறு குற்றங்களை உங்களுடைய அனுபவத்தில் சந்தித்திருக்கிறீர்கள்.

லோகேஷ் கனகராஜ் விஜய்யை இயக்குவதைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. நானும் விரைவில் விஜய்யிடம் கதை சொல்லி இயக்குவேன்.

லத்தி படத்தின் இயக்குனர் வினோத் 8 நாட்களில் என்னிடம் சம்மதம் வாங்கிவிட்டார்.  கதை கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதை பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

படப்பிடிப்பில் வேண்டுமென்றே அடிவாங்கவில்லை. சரியாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் நடக்கக் கூடிய சண்டைக் காட்சிகள். 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடிப்படுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன்.

இப்படத்தில் இரண்டு பேர் பேசப்படுவார்கள். ஒருவர் யுவன் சங்கர் ராஜா, இரண்டாவது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் பேசப்படுவார். நான் எந்த வண்டியில் சென்றாலும் பொன்.பார்த்திபனையும் அழைத்து செல்வேன். 
கலை இயக்குர் கணேஷுக்கு முக்கியமாக நன்றி கூற வேண்டும்.

ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து புரட்சி தளபதி வாழ்க என்று சொல்ல வேண்டாம்.. நான் தளபதி அல்ல, புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால் அவ்வளவு தான். ” என்றார்.

தொடர்ந்து இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறை அதிகாரி ஜாங்கிட் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இப்படம் வெற்றி பெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து படத்தயாரிப்பாளர்களான நந்தா, ரமணா இருவரும் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். 

Tags: Vishal, vinothkumar, nandha, ramana, vinothkumar, lokesh kanagaraj

Share via: