ஆர்யா பிறந்தநாளுக்கு சைக்கிள் வழங்கிய படக்குழு
12 Dec 2022
ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம், ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் ஆர்யாவின் ரைடர்ஸ் டீம் ஜம்மி குழு இணைந்து “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் வாழும், 10 ஏழைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆர்யா பிறந்த நாளில் (டிசம்பர் 11) சைக்கிள் வழங்கியுள்ளது.
ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்து கதையாக உருவாகும் புதிய திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 10 அன்று ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
பின்பு ஆர்யா பிறந்த நாளில் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் அரசுப்பள்ளியில் படிக்கும் அந்த பகுதிகளில் வாழும் ஏழை மாணவ, மாணவிகள் 10 பேருக்கு ஆர்யாவால் சைக்கிள் வழங்கப்பட்டது. மேலும் படக்குழுவினர், கிராமத்து மக்களுடனும் பள்ளி மாணவர்களுடனும் இணைந்து, ஆர்யா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
Tags: Arya, muthaiyah, kadhabaasha endra muthuramalingam