பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி?

23 Apr 2024

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தினை கடைசியாக இயக்கி இருந்தா பாண்டிராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பினை வரவில்லை. ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்குப் பிறகு பல்வேறு நாயகர்களை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார் பாண்டிராஜ்.

ஆனால், அனைத்துமே பேச்சுவார்த்தை ஆளவிலேயே இருந்தது. எதுவுமே ஒப்பந்தம் கட்டத்திற்கு செல்லவில்லை. தற்போது விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பாண்டிராஜ். இருவருமே கதை அளவில் இணைவது உறுதியாகிவிட்டது.

சில தயாரிப்பாளர்களும் புதிய கூட்டணி என்பதால், தயாரிக்க முன்வந்துள்ளார்கள். மே முதல் வாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகி, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Tags: pandiraj, vijay sethupathi

Share via: