சாம் ஆண்டன் இயக்கத்தில் சந்தீப் கிஷன்

23 Apr 2024

சாம் ஆண்டன் இயக்கவுள்ள புதிய படத்தில் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளார்.

தமிழில் ஆர்யா, சாயிஷா நடித்த ‘டெடி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கினை இயக்கி முடித்துள்ளார் சாம் ஆண்டன். ‘பட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அல்லு சிரிஷ் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘டெடி’ படத்தின் இந்தி ரீமேக்கினையும் இயக்கவுள்ளார் சாம் ஆண்டன். இதில் கங்கணா ரணாவத் நடிப்பது உறுதியாகிவிட்டது. இதனையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கங்கணா மும்முரமாக இருப்பதால், அவருடைய தேதிகள் கிடைப்பது தாமதமாகிறது.

இதனால், ‘டெடி’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கு முன்பாக தமிழ் படமொன்றை இயக்கவுள்ளார் சாம் ஆண்டன். இதில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கவுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவுள்ளது.

இதற்கான படப்பிடிப்பு இடங்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அவை முடிவடைந்தவுடன் சந்தீஷ் கிஷன் உடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெறவுள்ளன.

Tags: sundeep kishan, sam anton

Share via: