அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய விஷால்

23 Apr 2024

மீண்டும் அரசியல்வாதிகளை கடுமையாக சாடி பேசியுள்ளார் விஷால்.

ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரத்னம்’. ஏப்ரல் 26- ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்ட விஷால் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:

”சமுதாயத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் உட்பட யார் வேண்டுமானாலும் வரலாம். குறிப்பிட்ட இந்த குடும்பத்தில் இருந்து மட்டும் தான் என்றெல்லாம் கிடையாது. மக்கள் நல்லது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து வர வேண்டும்.

அரசியல் ஒரு பொழுதுபோக்கு கிடையாது. தெரியாத பல குடும்பங்களுக்கு நல்லது செய்யப் போகிறீர்கள். ஆகையால் கண்டிப்பாக அரசியலுக்கு வரப் போகிறேன். நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். ஏன் இன்னொரு கொடி, கட்சி? அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறும் போது, நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறுகிறார்கள்.

தயவு செய்து எங்களுடைய வேலையைப் பார்க்க விடுங்கள். அப்படி விட்டீர்கள் என்றால் நல்ல விஷயம். அப்படியில்லை என்றால் களத்தில் இறங்கி வேலை செய்து மாற்றத்தினைக் கொண்டு வருவோம். மக்களிடம் இருந்து பணத்தை ஆட்டைய போட்டு, அதையே மக்களுக்குக் கொடுத்து மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்யலாம் என நினைக்கிறார்கள்.

அவர்கள் கொடுக்கும் பணம், அவர்களுடைய சம்பாத்தியமா என்ன? மக்களை அவ்வளவு அலட்சியமாக நினைக்கிறார்கள். மக்கள் மாறிவிட்டார்கள், இனிமேல் அவர்களை ஏமாற்ற முடியாது”

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

Tags: vishal

Share via: