‘விடாமுயற்சி’ இறுதிகட்டப் படப்பிடிப்பு திட்டங்கள்
15 Jun 2024
‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘விடாமுயற்சி’. முழுக்க அஜர்பைஜானில் படப்பிடிப்பு திட்டமிடப்பட்ட இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
லைகா நிறுவனம் சரியாக திட்டமிடப்படாததால் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு சொன்ன தேதியில் முடியவில்லை. இதனால் அஜித் கோபமாகி, ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார். மேலும், ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு எப்போது என்பதும் தெரியாமல் இருந்தது.
தற்போது, இந்த மாத இறுதியில் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து நடிகர்களிடம் தேதிகள் வாங்கப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பு சுமார் 40 நாட்கள் நடைபெறுகிறது.
இதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. தீபாவளிக்கு படத்தினை வெளியிட வேண்டும் என்று இயக்குநரிடம் கறாராக தெரிவித்துவிட்டது லைகா நிறுவனம். அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க ஆயத்தமாகி வருகிறது படக்குழு.
Tags: vidamuyarchi, ajith kumar, anirudh, magizh thirumeni