தமிழ்நாட்டில் 68.5 கோடி வசூலித்த ‘காந்தாரா 1’

17 Oct 2025

ஹோம்பேலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான ‘காந்தாரா சாப்டர் 1" படம், இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 68.5 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

உலக அளவில் இப்படம் 717 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள். சுமார் 100 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் எதிர்பார்த்ததைப் போலவே இவ்வளவு கோடிகளை வசூலித்துள்ளது.

தீபாவளிக்கு சில படங்கள் வெளியாகி உள்ளதால் இப்படம் வசூல் குறையுமா அல்லது தீபாவளிப் படங்களை மிஞ்சும் அளவிற்கு வசூலைத் தொடருமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும். 

Tags: kanthara, rishab shetty

Share via: