பான் இந்தியா ஸ்டார்-ஐ பிரபலமாக்கிய பிரபாஸ்
23 Oct 2025
பிரபாஸின் திரை ஆளுமையும், திரையை புயல் போல் ஆக்கிரமிக்கும் ஆற்றலும், திரைக்குப் பின்னால் அவரின் எளிமையான பண்பும், இந்தியா முழுக்க அவரை ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் பதிய வைத்திருக்கிறது.
தொடர் வெற்றிப் படங்களும், உலகளாவிய ரசிகர் வட்டாரமும் இணைந்து, அவருக்கு “இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார்” என்ற பட்டத்தை தந்துள்ளன. ஒவ்வொரு படமும் ஒரு கொண்டாட்டமாக மாறும் அளவுக்கு, அவரின் ஒவ்வொரு தோற்றமும் ஒரு கொண்டாட்டமாக மாறிவிடுகிறது. இந்த மாதம் அவர் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள்.
பிரபாஸ் “ரெபெல் ஸ்டார்” என பாராட்டப்படுவதற்குக் காரணம் வெற்றிப் படங்கள் மட்டும் அல்ல — அவரின் நேர்மை, பணிவு, மற்றும் சர்ச்சைகளற்ற வாழ்வும் தான். தயாரிப்பாளர்களுக்குப் பிரபாஸ் ஒரு நம்பிக்கையின் அடையாளம். அவர் ஒரு படத்தில் இருந்தாலே வெற்றி உறுதியானது என கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பிரபாஸின் ரசிகர்களுக்கே சொந்தம்! அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பழைய படங்கள் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டும் அதே உற்சாகம் — சலார், ஈஸ்வர், பௌர்ணமி அக்டோபர் 23 அன்றும், மேலும் பாகுபலி: தி எபிக் (இரு பாகங்களும் சேர்ந்து) அக்டோபர் 31 அன்றும் மீள்பதிப்பாக வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன
பிரபாஸ் தனது தன்னார்வச் செயல்களை எப்போதும் விளம்பரம் செய்வதில்லை. அவர் புகழை நாடாமல் வெகு அமைதியாக பலருக்கு உதவி செய்து வருகிறார். இது தான் அவரை மற்ற ஸ்டார்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது. திரையில் அவர் ரெபெல் ஸ்டார், திரைக்குப் பின்னால் உன்னதாமான மனிதர்.
பிரபாஸ் பல்வேறு வகை படங்களில் நடித்து தனது மாறுபட்ட நடிப்புத் திறமையை நிரூபித்திருக்கிறார். அவரின் அடுத்த படங்களாக தி ராஜா சாப் (ஜனவரி 9, 2026), சலார்: பாகம் 2 – ஷௌர்யாங்க பர்வா, போலீஸ் டிராமா ஸ்பிரிட், கல்கி 2898 AD: பாகம் 2, மற்றும் வரலாற்று டிராமா திரைப்படம் ஃபௌஜி ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. கல்கி 2898 AD மற்றும் சலார்: பாகம் 1 – சீஸ்ஃபயர் ஆகியவை ஒரே ஆண்டில் வெளியானது, அவரின் நிலைத்தன்மை மற்றும் உறுதியைக் காட்டுகிறது.
பாகுபலி போன்ற படங்கள் பிரபாஸை உலகளவில் அறிமுகப்படுத்தின. மிகப்பெரிய கனவுகளைக் கொண்ட எந்த இயக்குநருக்கும் முதலில் நினைவில் வருவது பிரபாஸ்தான். பான் இந்தியா ஸ்டார் என்பதை பிரபலடுத்தியவரும் பிரபாஸ் தான். அதை ஆரம்பித்து வைத்து இன்று வரையிலும் அதை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
கல்கி 2898 AD, பாகுபலி போன்ற படங்கள் தொடர்ந்து ₹1000 கோடியை தாண்டி வசூலை பதிவு செய்துள்ளதால், அவர் “மெகா விஷன்” கொண்ட படங்களுக்கு இயல்பான தேர்வாக மாறியுள்ளார்.
Tags: prabhas
