வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியின் ‘அரசன்’ முன்னோட்ட வீடியோ
17 Oct 2025
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிலம்பரசன் நடிக்க உள்ள ‘அரசன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ இன்று யு டியுப் தளத்தில் வெளியிடப்பட்டது.
முன்னதாக நேற்று மாலை சில தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகளாக அது திரையிடப்பட்டது. சிம்பு ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் அதைக் கண்டுகளித்தனர்.
வடசென்னை பின்னணியில் உருவாக உள்ள இப்படத்தின் முன்னோட்ட வீடியோவில் சிலம்பரசன் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் நடித்திருந்தனர். நெல்சன், சிம்பு காட்சி ஒன்றும், நீதிமன்றக் காட்சி ஒன்றும், சிலரைக் கொலை செய்துவிட்டு சிம்பு நடந்து வரும் காட்சி ஒன்றுமாக இதில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஒளிப்பதிவு, பின்னணி இசை, வசனம் ஆகியவை படம் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டமாக அமைந்திருந்தது.
தமிழில் 'அரசன்' என்ற பெயரிலும் தெலுங்கில் 'சாம்ராஜ்யம்' என்ற பெயரிலும் உருவாக உள்ளது. தெலுங்கில் இந்த முன்னோட்ட வீடியோவை ஜுனியர் என்டிஆர் வெளியிட்டார்.
இப்படத்தின் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Tags: arasan, vetrimaaran, simbu, anirudh