தாமதமாகும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு

15 Jun 2024

‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நீண்ட மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

’வா வாத்தியார்’ படத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட ‘மெய்யழகன்’ படப்பிடிப்பு முடிவடைந்து, படமும் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. ஆனால் படப்பிடிப்பு தாமதம், நடிகர்களின் தேதிகள், படப்பிடிப்பு குளறுபடிகள் என பல்வேறு காரணங்களால் இன்னும் ‘வா வாத்தியர்’ படப்பிடிப்பு முடிவடையவில்லை.

இதனிடையே, ‘சர்தார் 2’ படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்குவதாக இருந்தது. அதனை ஜூலை இறுதியில் தொடங்கலாம் என்று தள்ளிவைத்துவிட்டார்கள். விரைவில் ‘வா வாத்தியார்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது.

‘சர்தார் 2’ படப்பிடிப்புக்கு முன்பாக, படம் குறித்த அறிவிப்புக்கு ப்ரோமோ ஒன்றை படமாக்க இருக்கிறார்கள். இதற்கே பல கோடிகளை செலவழிக்க முடிவு செய்துள்ளது படக்குழு. படப்பிடிப்பு தொடங்கும் அன்று, ப்ரோமோவை வெளியிட்டு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். தற்போது கார்த்தியோடு நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Tags: sardar, karthi, mithran

Share via:

Movies Released On July 15