25 மில்லியன் பார்வைகளைக் கடந்த யுவன்ஷங்கர் ராஜாவின் ‘டாப் டக்கர்’
16 Feb 2021
தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா.
அவருடைய இசையில் வெளிவந்த ‘ரௌடி பேபி’ பாடல் யு டியூபில் அதிக பார்வைகளைப் பெற்ற தமிழ் சினிமா பாடல் என்ற சாதனையில் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் ‘டாப் டக்கர்’ (Top Tucker) என்ற தனி இசைப் பாடல் ஒன்றிற்கு இணைந்துள்ளார்.
இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பதா மற்றும் உஜானா அமித் பாடியுள்ளனர். மூவரும் இணைந்து திரையில் தோன்றி கலக்கியிருக்கும் இப்பாடலில், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகையும் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார். இப்பாடலின் ஒரு சிறு பகுதியில் தமிழில் வரும் வரிகளை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். மேலும் ஜொனிடா காந்தியும் ஒரு சிறு பகுதிக்கு குரல் தந்துள்ளார்.
இப்பாடல் யு டியுப் தளத்தில் தற்போது 25 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
யுவன் சங்கர் ராஜாவின் சினிமா இல்லா தனி இசை பாடல் பயணம் 1999ல் “The Blast” ஆல்பத்தில் துவங்கியது. அந்த ஆல்பத்தில் தமிழின் முன்னணி பிரபலங்கள் உன்னிகிருஷ்ணன், கமலஹாசன் உட்பட பலர் பாடிய 12 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
தனது இசை நிறுவனமான U1 Records இணையதளம் மூலம் பல தனி இசை முன்னெடுப்புகளையும், பல இசைத்திறமைகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்ய உள்ளார் யுவன் சங்கர் ராஜா.
Tags: yuvan shankar raja, top tucker