பறந்து போ - மகிழ்ச்சியைப் பகிரும் சிவா, கிரேஸ் ஆண்டனி
03 Jul 2025
ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஷ் ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ள படமான 'பறந்து போ' நாளை ஜூலை 4 அன்று வெளியாகிறது.
படம் குறித்து நாயகன் மிர்ச்சி சிவா பகிர்ந்து கொண்டதாவது, “ராம் சார் என்னை படத்திற்காக அழைத்தபோது எனக்கே ஆச்சரியமாகதான் இருந்தது. தனக்கு வேண்டும் என்பதை சரியாக நடிகர்களிடம் இருந்து வாங்கிவிடக் கூடியவர் இயக்குநர் ராம். அவரது வழக்கமான ஸ்டைலில் உருவாகி இருக்கும் படமாக இது இருக்கும். நிச்சயம் படம் பார்த்துவிட்டு சிரித்த முகத்தோடும் நிறைவான மனதோடும் திரையரங்கில் இருந்து வெளியே வருவீர்கள். படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது” என்றார்.
நாயகி கிரேஸ் ஆண்டனி, "ராம் சார் படத்துக்காக என்னை அழைத்தபோது அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய கதையில் நான் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடைய டெடிகேஷன் வேற லெவல்! சிவா, அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். படம் உங்களுக்கும் பிடிக்கும்" என்றார்.
Tags: parandhu po, ram