இளையராஜா ஸ்டுடியோவுக்குச் சென்ற ரஜினிகாந்த்
16 Feb 2021
இந்தியத் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளரான இளையராஜா அவரது பெயரில் ‘இளையராஜா ஸ்டுடியோ’ என சென்னை, கோடம்பாக்கத்தில் ஸ்டுடியோவைத் திறந்துள்ளார். அவர் இசையமைக்கும் படங்களின் இசைப் பணிகள் தற்போது அங்குதான் நடைபெற்று வருகிறது.
நேற்று காலை சென்னை, தி நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்குச் சென்ற ரஜினிகாந்த் அங்கு அவருடன் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். பின்னர் இளையராஜாவின் ஸ்டுடியோவிற்குச் சென்று அதைப் பார்வையிட்டுள்ளார். அவர் இசையமைக்கும் பணிகளை உடனிருந்து பார்த்தார்.
ஸ்டுடியோவை முழுவதுமாக சுற்றிப் பார்த்த ரஜினிகாந்த் கோயிலுக்குள் வந்தது போன்ற உணர்வு வந்ததாகப் பாராட்டி இருக்கிறார்.
இந்நிலையில் இன்றும் இரண்டாவது முறையாக இளையராஜா ஸ்டூடியோவுக்கு மீண்டும் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.
சமீபகாலமாக பொது நிகழ்ச்சி, விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் ரஜினிகாந்த் இளையராஜா ஸ்டுடியோவுக்குச் சென்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Tags: rajinikanth, ilaiyaraaja