'துப்பறிவாளன் 2' இயக்கும் விஷால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

10 Mar 2020

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா மற்றும் பலர் நடிக்க ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் லண்டனில் ஆரம்பமாகி நடைபெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்படத்தை இயக்குவதிலிருந்து மிஷ்கின் விலகிவிட்டார் என்றார்கள். இல்லையில்லை, விலக்கப்பட்டார் என்றுதான் செய்திகள் வெளிவந்தன.

படத்தின் பட்ஜெட்டை மிஷ்கின் உயர்த்தியதாலும், ‘சைக்கோ’ பட வெற்றியால் தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும், அதனால்தான் மிஷ்கின் விலக்கப்பட்டார் என்றார்கள்.

படத்தை விஷாலே இயக்கப் போகிறார் என்றும் தகவல் வெளியானது. ஆனால், இதுவரையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் நாளை ‘துப்பறிவாளன் 2’ படத்தின் முதல் பார்வையை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். அந்த அறிவிப்பில், விஷால், இளையராஜா ஆகியோரது பெயர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் மூலம் விஷால் இயக்குனராக அறிமுகமாவதும், படத்தை அவர் இயக்குவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

Tags: thupparivaalan 2, vishal, ilaiyaraaja

Share via: