ஹாலிவுட் படத்தில் தபு ஒப்பந்தம்
14 May 2024
பிரபல ஹாலிவுட் படத்தில் நடிக்க தபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
உலகளவில் ’டூயுன்’ படங்கள் மிகவும் பிரபலம். ஃப்ராங் ஹர்பேர்ட் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படங்கள் உருவாக்கப்பட்டன. இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகி, பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தற்போது ‘டூயுன்’ படங்களுக்கான முன்கதையை படமாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர். அதில் தபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை ஹாலிவுட்டின் முன்னணி நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டுள்ளனர்.
2019-ம் ஆண்டிலேயே இதன் பணிகள் தொடங்கிவிட்டாலும், கொரோனா காலம், இயக்குநர் மாற்றம், நடிகர்கள் மாற்றம் என பல்வேறு தடங்களை கடந்துள்ளது ‘டூயுன்’ முன்கதை படங்கள். தற்போது அனைத்துமே இறுதியாகி படப்பிடிப்பினை தொடங்கவுள்ளனர்.
Tags: tabu, dune