கடும் சிக்கலில் லைகா நிறுவனம்

14 May 2024

பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டது லைகா நிறுவனம். இது சரியாக சில மாதங்கள் ஆகலாம் என்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்து, பல்வேறு பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். தற்போது ரஜினி நடிப்பில் ‘வேட்டையன்’, அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’, கமல் நடிப்பில் ’இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ என பிரம்மாண்ட படங்கள் மட்டுமன்றி பல்வேறு சிறு முதலீட்டு படங்களையும் தயாரித்துள்ளது.

இவை அனைத்துமே இன்னும் வெளியாகவில்லை. மேலும், ஓடிடி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தமான பணமும் வரவில்லை. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது.

இதனால், தாங்கள் தயாரிப்பதாக ஒப்புக் கொண்ட பல்வேறு இயக்குநர்களின் அடுத்த படங்களின் பணிகளை நிறுத்திவிட்டது. அவர்களிடம் நிலைமை சரியாக இன்னும் 5 முதல் 6 மாதங்கள் ஆகலாம். அதற்குள் வேறு ஏதேனும் வாய்ப்பு வந்தால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டது.

விரைவில் ‘இந்தியன் 2’ படத்தினை வெளியிட்டு, அது பிரம்மாண்ட வெற்றி பெற்றால் மட்டுமே அந்தப் பணத்தினை வைத்து இதர படங்களை முடித்து வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது லைகா நிறுவனம். இனி ஒரே நேரத்தில் பல பெரிய முதலீட்டு படங்களை தயாரிக்கக் கூடாது எனவும் முடிவு செய்துள்ளது.

Tags: lyca, indian 2, vidamuyarchi, vettaiyan

Share via: