கோபி – சுதாகர் படத்தில் பாடகர் சிவகார்த்திகேயன்
15 May 2024
கோபி – சுதாகர் நடித்துள்ள படத்தில் பாடலொன்றை பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
‘பரிதாபங்கள்’ என்ற சேனல் மூலம் மிகவும் பிரபலமான கூட்டணி கோபி மற்றும் சுதாகர். இருவரும் இணைந்து முதலில் கூட்டு தயாரிப்பில் படமொன்றை தொடங்கினார்கள். ஆனால், அந்தப் படம் சில பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது.
தற்போது ’பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் புதிய நிறுவனத்தின் மூலம் படமொன்றை தயாரித்து முடித்துள்ளனர். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் கோபி – சுதாகர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். விஷ்ணு விஜயன் இயக்கியுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் படலொன்றை பாடிக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். கோபி – சுதாகர் இருவருக்குமே நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன். இதனால் தனக்கு பிடித்தவர்களுக்காக இந்த உதவியை செய்துக் கொடுத்துள்ளார்
Tags: paridhabangal, gopi, sudhakar, sivakarthikeyan