கெளதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி?

15 May 2024

கெளதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமையும் இன்னும் விற்பனையாக வில்லை.

இதனிடையே, வேல்ஸ் நிறுவனத்திற்கு படமொன்றை இயக்கி கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் இருக்கிறார் கெளதம் மேனன். இந்தப் படம் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் உள்ளது.

தற்போது மம்முட்டி நடிப்பில் மலையாள படமொன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் கெளதம் மேனன். இதில் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் உள்ளார் மம்முட்டி. இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக பேட்டியொன்றில் மலையாள படமொன்றை இயக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார் கெளதம் மேனன். அதுவே இப்போது தகவலாக வெளியாகியுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Tags: gautham vasudev menon, mammotty

Share via: