கன்னடப் படத்தில் சாயிஷா அறிமுகம்

18 Mar 2020

தமிழில் ‘வனமகன்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதன் பின் “கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான்” ஆகிய படங்களில்தான் நடித்துள்ளார்.

அதற்குள் நடிகர் ஆர்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் தனது கணவர் ஆர்யா ஜோடியாக ‘டெடி’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தெலுங்கில் முதன் முதலில் நடிகையாக அறிமுகமாக, ஹிந்தியில் ஒரு படத்திலும், தமிழில் ஆறு படங்களிலும் நடித்துள்ள சாயிஷா, கன்னடத்திலும் அறிமுகமாக உள்ளார்.

புனித் ராஜ்குமார் நாயகனாக நடிக்கும் ‘யுவரத்னா’ படத்தில் சாயிஷா தான் கதாநாயகி. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி கன்னட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Tags: sayeesha, yuvarathnaa, kannada cinema

Share via: