’புஷ்பா 2’ பணிகள் மும்முரம்: பின்வாங்கும் பல படங்கள்

17 Apr 2024

‘புஷ்பா 2’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் துவங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புஷ்பா 2’. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், சிலர் அல்லு அர்ஜுனை தவிர வேறு யாரையும் காட்டவில்லையே என்று பலரும் குறிப்பிட்டும் இருந்தார்கள்.

இதனிடையே, ‘புஷ்பா 2’ படத்திற்காக புதிய டீஸர் ஒன்றை படக்குழு உருவாக்கி வருகிறது படக்குழு. இதில் அனைத்து கதாபாத்திரங்களும் இடம்பெறும் வகையில் அமைத்திருக்கிறார்கள். அத்துடன் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளையும் துவக்க இருக்கிறது படக்குழு.

‘புஷ்பா 2’ படத்தினை அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதால், விளம்பர பணிகளுக்கு மட்டும் பல கோடிகளை செலவழிக்க உள்ளார்கள். முதல் நாளிலேயே பெரிய வசூலை எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது தயாரிப்பு நிறுவனம். மேலும், பெரிய முதலீடு என்பதால் அனைத்து மொழிகளுக்கும் அல்லு அர்ஜுன் நேரடியாக விளம்பரப்படுத்த இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15-ம் தேதி ‘புஷ்பா 2’ வெளியாக இருப்பதால், அன்றைய தினத்தில் வெளியிட திட்டமிட்ட படங்கள் யாவுமே பின்வாங்கிவிட்டன. இது இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக இருக்கும் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.

Tags: pushpa 2, allu arjun

Share via: