பிரதீப் ரங்கநாதன் கிடுகிடு சம்பளம்

17 Apr 2024

பிரதீப் ரங்கநாதனின் சம்பளத்தை கேட்டுவிட்டு பல தயாரிப்பாளர்கள் வாயடைத்து போயிருக்கிறார்கள்.

‘லவ் டூடே’ படத்தினை இயக்கி, நாயகனாக நடித்தவர் பிரதீப் ரங்கநாதன். இது அவருடைய இரண்டாவது படமாகும். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

‘லவ் டூடே’ படத்தின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதனை வைத்து 2-வது படமொன்றையும் தயாரிக்கவுள்ளது. இதனை ‘ஓ மை கடவுளே’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது. தன்னை நாயகனாக்கிய தயாரிப்பாளர் என்பதால் இதற்கு மிக குறைந்த அளவிலேயே சம்பளம் வாங்கியுள்ளார் பிரதீப்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்.ஐ.சி’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். மேலும், புதுமுக இயக்குநர் கீர்த்திவாசன் இயக்கவுள்ள படத்திலும் நாயகனாக நடிக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

இதற்குப் பிறகு யார் நாயகனாக நடிக்க  கேட்டாலும், 10 கோடி சம்பளம் என்கிறார். இதனால் பல தயாரிப்பாளர் 10 கோடி சம்பளமா என்று வாயடைத்து போயிருக்கிறார்கள்.

Tags: pradeep ranganathan

Share via: