நடிகர் ஆரவ் ஆரம்பித்துள்ள ‘ஆரவ் ஸ்டுடியோஸ்’ நிறுவனம்
01 Nov 2025
விஜய் டிவியில் ஒளிபரப்பான, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் ‘வின்னர்’ ஆனவர் ஆரவ்.
‘சைத்தான், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், கலகத் தலைவன், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன், ராஜபீமா, விடாமுயற்சி’ ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது புதிய படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் ஆரவி. அது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில்,
“கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.
இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS”-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது. விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.
கடவுளின் அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்.
எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags: arav

