அனிருத் பாடலுக்காக படப்பிடிப்பு ஒத்திவைப்பு

17 Apr 2024

பல்வேறு படங்கள் அனிருத்தின் பாடலுக்காக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளர் வலம் வருபவர் அனிருத். அவருடைய பாடல்கள் யாவுமே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அடைந்து வருகின்றன. சமீபத்தில் வெளியான ‘கோட்’ பாடலுக்குக் கூட, அனிருத் இசையமைத்தால் இப்படியா இருக்கும் என்று பலருடைய கருத்தைப் பார்க்க முடிந்தது.

தற்போது தமிழில் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’, ‘எல்.ஐ.சி’, ‘வேட்டையன்’, ‘விடாமுயற்சி’, ‘ரஜினி 171’, ‘விஜய் – ஹெச்.வினோத்’, ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட பல படங்களுக்கு பணிபுரிந்து வருகிறார். தெலுங்கில் ‘தேவரா’, ‘மேஜிக்’, ‘விஜய் தேவரகொண்டா – கெளதம்’ ஆகிய படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

இதில் பல முன்னணி நடிகரின் படங்கள் கூட அனிருத்தின் பாடலுக்காக காத்திருக்கின்றன. அவருடைய பாடல் வந்தால் மட்டுமே, அரங்குகள் உள்ளிட்ட அனைத்துமே தயார் செய்ய முடியும் என்பதால் காத்திருக்கிறார்கள்.  பாடல் ஹிட் ரேட் அதிகம் என்பதால், அனிருத்தின் மனம் கோணாத வகையில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலரும் பேசி பணிகளை முடித்து வருகிறார்கள்.

இது அனிருத்தின் காலம் என்பது இதன் மூலம் தெரியவருகிறது என்கிறார்கள் திரையுலகில்.

Tags: anirudh

Share via: