‘தக் லைஃப்’ அப்டேட்: மீண்டும் ஜெயம் ரவி – துல்கர் சல்மான்?

17 Apr 2024

‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக வெளியாகியுள்ள செய்தி வெறும் வதந்தி தான் என தெரியவந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி, கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்தப் படத்தில் நடைபெற்ற தேதிகள் குளறுபடியால் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகிவிட்டார்கள். அவர்களுக்கு பதிலாக சிம்பு மற்றும் இன்னொரு நடிகர் நடிப்பார் என தகவல் வெளியானது. இதனிடையே, மீண்டும் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி நடிக்க சம்மதித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விசாரித்த போது, ”அது வெறும் வதந்தி தான். துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் ‘தக் லைஃப்’ படத்தில் இணைய வாய்ப்பில்லை. இதில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகி ஒப்பந்தமாகிவிட்டது. ஜெயம் ரவிக்கு பதிலாக சில நடிகர்களிடம் மணிரத்னம் பேசியிருக்கிறார். தேதிகள் ஒத்துவருவதை வைத்து யார் நடிப்பார் என்பது உறுதியாகும்” என்றார்கள்.

Tags: thug life, mani ratnam, jayam ravi, dulquer salman, kamal haasan

Share via: