அறிமுக இயக்குநர்களின் அவலநிலை

18 Apr 2024

தமிழ் திரையுலகில் அறிமுக இயக்குநர்கள் பலருடைய நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் அறிமுகமானார்கள். அவர்களது திறமையை வைத்து பலரும் இயக்குநராக வேண்டும் என்று படையெடுத்தார்கள். புதுமையான கதைகளத்துடன் பலரும் படங்களை இயக்கவும் செய்தார்கள்.

ஆனால், இப்போதைய காலம் அறிமுக இயக்குநர்களுக்கு கடும் அவஸ்தையான காலம் எனலாம். என்னவென்றால், தயாரிப்பாளர்கள் பலரும் அறிமுக இயக்குநர் என்ற வார்த்தையினைக் கேட்டாலே வேண்டாம் என்று தான் சொல்கிறார்கள். அவருடைய கதையோ அல்லது ஒருவரி கதையோ எதையுமே கேட்க தயாராக இல்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை. இன்னொன்று பல்வேறு அறிமுக இயக்குநர்கள் – முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய படங்களின் தோல்வி.

இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு அறிமுக இயக்குநரின் படத்தை தயாரிக்கவே வேண்டாம் என்ற முடிவு செய்துவிட்டார்கள்.

ஒரு முன்னணி நடிகரை தனது கதையினால் இம்ப்ரஸ் செய்து, பின்பு அந்த நடிகரின் மூலம் தயாரிப்பாளரை அணுகினால் மட்டுமே இனிமேல் அறிமுக இயக்குநரின் படமே நடக்கும். இந்த நிலை மாற இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.

Tags: tamil cinema, directors, lokesh kanagaraj, karthik subburaj

Share via:

Movies Released On May 19