’குபேரா’ படத்திற்கு புதிய சிக்கல்

17 Apr 2024

’குபேரா’ படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. மும்பை தாராவில் நடக்கும் கதை என்பதால், இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் என்பதால் இந்த முடிவினை எடுத்துள்ளது படக்குழு.

சமீபத்தில் ‘குபேரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தற்போது இதன் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் நரேந்திரா இதே தலைப்பை திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்து வைத்துள்ளார். அதே தலைப்பை இப்படி இந்தப் படக்குழுவுக்கு கொடுக்கலாம் என்று புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

இந்தப் புகாருக்கு பதில் வரவில்லை என்பதால் நரேந்திரா மேலும் முறையிட்டுள்ளார். அவருக்கு முறையான பதில் வரவில்லை என்பதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியுள்ளார் நரேந்திரா.

Tags: gubera, dhanush

Share via: