தினமும் 250 பேருக்கு உணவளிக்கும் பிரகாஷ்ராஜ்

30 Mar 2020

சினிமாவில் வில்லன்களாக நடிப்பவர்களை கெட்டவர்கள் என்றே பார்த்து வளர்ந்த சமூகம் இது.

கதாநாயக நடிகர்கள் என்ன நடந்தாலும் அமைதியாக இருக்க வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜ் அவரது அறக்கட்டளை மூலம் தினமும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

கொரானோவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, பாண்டிச்சேரி, கம்மம் ஆகிய ஊர்களில் அவருடைய உதவிகள் தினமும் தொடர்கின்றன.

சென்னை அருகே உள்ள கோவளம் ஊரில் வீடற்றவர்கள் 250 பேருக்கு தினமும் உணவுகளை வழங்கி வருகிறார்.

இது குறித்து அவருடைய டிவிட்டரில், வீடற்றவர்கள், தினசரி வேலை செய்பவர்கள் 250 பேருக்கு கோவளத்தில் தினமும் உணவு வழங்கி வருகிறேன். இது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, நம்முடையதும்தான். மனிதத்தை வளர்ப்போம். தயவு செய்து உங்களைச் சுற்றி உள்ள ஒரு குடும்பத்திற்காவது உதவுங்கள்,” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags: corono, covid 19, tamil cinema, prakashraj

Share via: