முதல்வர் நிவாரண நிதி - முதலில் கொடுத்த சிவகார்த்திகேயன்
31 Mar 2020
கொரானோ வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இந்தியாவில் பிரதமர், அந்தந்த மாநில முதல்வர்கள் பலர் நிவாரண உதவிகளையும், நிதியுதவிகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
தெலுங்குத் திரையுலகத்தில் நடிகர்கள் கோடி கோடிகளாக நிதியுதவியை அறிவித்துக் கொண்டிருக்க தமிழில் ஒரு நடிகர், நடிகையர் கூட நிவாரண உதவியை அறிவிக்கவில்லை. பெப்ஸி என்ற அவர்களது தொழிலாளர் அமைப்புக்கு மட்டுமே சில நடிகர்கள் உதவி செய்தார்கள். அதில் கூட கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் எதுவும் அளிக்கவில்லை.
இந்நிலையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு தமிழ்த் திரையுலகத்திலிருந்து முதல் நபராக நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் தருவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் பெப்ஸி தொழிலாளர்களுக்காக 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார்
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகிய சீனியர் நடிகர்கள் எதுவும் அறிவிக்காத நிலையில் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இனிமேலாவது மற்ற நடிகர்களும் நிதியுதவி கொடுக்க முன்வருவார்களா ?.
Tags: corono, covid 19, tamil cinema, sivakarthikeyan