மாவீரன் - சிவாஜிகணேசன் விலகியது ஏன் ?

30 Mar 2020

ரஜினிகாந்த் நடித்து 1986ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘மாவீரன்’. ராஜசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.

ஹிந்தியில் அமிதாப்பச்சன், அம்ரிதா சிங், தாரா சிங் மற்றும் பலர் நடிக்க 1985ம் ஆண்டு வெளிவந்த ‘மர்த்’ படத்தின் ரீமேக்தான் இந்த ‘மாவீரன்’.

தமிழில் ரஜினிகாந்துடன் முதலில் சிவாஜிகணேசன் நடிப்பதாக இருந்ததாம். அதற்கான பட விளம்பரங்களைக் கூட வெளியிட்டுள்ளார்கள். ஆனால், பின்னர் படத்திலிருந்து சிவாஜிகணேசன் விலகியிருக்கிறார்.

படத்தில் அவருக்கான கதாபாத்திரம் குறைவாக இருந்ததும், அந்த சமயத்தில் அவர் பிஸியாக வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததும்தான் விலகியதற்கான காரணமாம்.

1986க்குப் பிறகு 13 வருடங்கள் கழித்து ‘படையப்பா’ படத்தில் ரஜினிகாந்த், சிவாஜிகணேசன் மீண்டும் இணைந்து நடித்தனர்.

ரஜினிகாந்தின் நிஜப் பெயர் சிவாஜிராவ் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சிவாஜிகணேசன் மீது மிகவும் மரியாதை வைத்திருந்தவர் ரஜினிகாந்த்.

 

Tags: maaveeran, rajinikanth, sivaji ganesan

Share via: