சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே ?

30 Mar 2020

ஹரி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ள ‘அருவா’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்கள்.

இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா தேர்வாகலாம் என்று தகவல் வெளியானது. ஆனால், தற்போது பூஜா ஹெக்டேவிடம் பேசி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழில் வெளியான ‘முகமூடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. சிலபல தோல்விகளுக்குப் பிறகு தற்போது தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்து முன்னணிக்கு வந்தார்.

தற்போது பிரபாஸ் ஜோடியாக ‘ஜான்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க சம்மதிப்பாரா என்பது இனிமேல்தான் தெரியும்.

 

Tags: aruva, hari, suriya, pooja hegde

Share via: