#Pray_For_samuthirakani - எதற்கென்றே தெரியாமல் ஒரு டிரென்டிங்
30 Mar 2020
நல்ல விதத்தில் பயன்படக் கூடிய சமூக வலைத்தளங்களை கிண்டல் என்ற பெயரில் பலர் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ரசிகர்களுக்குள்தான் சண்டையிட்டுக் கொள்வார்கள் என்று பார்த்தால் தேவையில்லாத விஷயங்களையும் கூடி டிரென்டிங் ஆக்குவது அப்படிப்பட்ட வீணர்களின் வழக்கம்.
அப்படித்தான் இன்று ஒரு டிரென்டிங் டிவிட்டரில் போய்க் கொண்டிருக்கிறது. #Pray_For_samuthirakani என்ற டிரென்டிங்கதான் அது.
யாரோ ஒருவர் ஆரம்பித்த அந்த கிண்டலைப் பலரும் தொடர்வதுதான் அதிர்ச்சி.
சமுத்திரக்கனி என்றாலே திரைப்படங்களில் அட்வைஸ் சொல்பவர் என்ற பேச்சு உண்டு. அதை வைத்துத்தான் அவரை இப்படி தரக் குறைவாக ஒரு கூட்டம் விமர்சித்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறது.
அவை எம்மாதிரியான மீம்ஸ்கள் என்பதை டிவிட்டரில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றை இங்கே பதிவிடுவதையே தவறு என நாங்கள் நினைக்கிறோம்.
இவர்களையெல்லாம் ஏன் கொரானோ வந்து தாக்கவில்லை என்றுதான் வருத்தமாக இருக்கிறது.
Tags: twitter, twitter trending, samuthirakani, pray for samuthirakani