போட்டோவில் இருப்பது யார் தெரியுமா ?
29 Mar 2020
பழைய விஷயங்களை நினைத்துப் பார்ப்பது எப்போதுமே தனி சுகம்தான். காலங்கள் உருண்டோட உருண்டோட மறக்க முடியாத சில நிகழ்வுகளை ஞாபகப்படுத்திப் பார்க்கும் போது நம்மை அதுவே உற்சாகப்படுத்தும்.
கொரானோ ஊரடங்கு காரணமாக பலரும் அவரவர் வீட்டில் உள்ளனர். பழைய அலமாரிகளைத் தேடிப் பிடித்து பழைய புகைப்படங்களை, புத்தகங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி ஒரு புகைப்படத்தை எடுத்து தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பிக் பாஸ் ஷெரின். ஆனால், அவர் ‘துள்ளுவதோ இளமை’ ஷெரின் என எத்தனை பேருக்குத் தெரியும்.
2002ம் ஆண்டு வெளிவந்த படம்தான் ‘துள்ளுவதோ இளமை’. கஸ்தூரி ராஜா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ் அறிமுகமான இந்தப் படத்தில்தான் ஷெரின் அறிமுகமானார். பல தாமதங்களுக்குப் பின் வெளியான படமாக இருந்தாலும் வெற்றி பெற்ற படம்.
அந்தப் படத்திற்குப் பின் ஒரு சில தமிழ்ப் படங்களில்தான் நடித்தார். பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்று, இறுதிப் போட்டி வரை வந்தார்.
இன்று ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அந்தப் புகைப்படத்திற்கு நிறையவே லைக்குகளைக் கொடுத்துக் கொண்டிரு
Tags: sherin, dhanush, thulluvatho ilamai, 2003