நிவாரண நிதி - அமைதி காக்கும் கமல்ஹாசன், விஜய், அஜித்

29 Mar 2020

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் மக்களிடம் நிவாரண நிதி, உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் அதிகபட்சமாக 25 கோடி கொடுத்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் பிரபாஸ் 4 கோடி வரையும், பவன் கல்யாண் 2 கோடியும் மற்றவர்களும் 1 கோடி, லட்சங்கள் என கொடுத்துள்ளார்கள்.

ஆனால், தமிழ்த் திரையுலகத்தில் இருந்து இன்னும் எந்த ஒரு முன்னணி நடிகரும் பிரதமரின் நிவாரண நிதிக்கோ, முதல்வரின் நிவாரண நிதிக்கோ நிதியுதவி எதுவும் அறிவிக்கவில்லை.

பெப்ஸி தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே நிதி வழங்கி உள்ளனர்.

தமிழ் நடிகர்கள் எந்த விதமான நிதியுதவியும் அளிக்காதது தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags: corono, covid 19, tamil cinema, vijay, ajith

Share via: