‘பிசாசு 2’ படத்தில் பாடிய சித் ஸ்ரீராம்
11 Jan 2021
ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக T.முருகானந்தம் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’
நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பாடகர் சித் ஸ்ரீராம் மெலடி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இப்பாடலைப் பாட அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து பாடி கொடுத்துள்ளார்.
இதற்கு முன்பு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘சைக்கோ’ படத்தில் இளையராஜாவின் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய ‘உன்னை நெனச்சி..., மற்றும் நீங்க முடியுமா...’ ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
‘பிசாசு 2’ படத்திற்காக பாடகிகள் பிரியங்கா, ஸ்ரீநிதி ஆகியோர் பாடிய பாடல்கள் இதற்கு முன் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Tags: pisasu 2, mysskin, karthik raja, andrea, poorna. sid sriram