‘பெத்தி’ படத்திற்காக ராம் சரணின் புதிய தோற்றம்
21 Jul 2025
‘கேம் சேஞ்சர்' படத்தைத் தொடர்ந்து 'புஜ்ஜி பாபுவின் ‘பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். இப்படத்தின் கரடுமுரடான கிராமத்து கதாபாத்திரத்திற்காக தாடி மற்றும் நீண்ட தலைமுடியுடன் தோற்றத்தை மாற்றியுள்ளார்.
மேலும், தனது உடல் தோற்றத்தை மாற்றுவதற்காக சிறப்பு உடற்பயிற்சியாளரை நியமித்து, ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட புகைப்படத்துடன், "மாற்றம் தொடங்குகிறது. தூய மன உறுதி, உண்மையான மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.
இப்படத்தில் ராம் சரண் ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். புச்சி பாபு சனா இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரத்னவேல் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. விளையாட்டை மையப்படுத்தி பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் 2026 மார்ச் 27 அன்று வெளியாகிறது.
Tags: peddi, ram charan, jhanvi kapoor, ar rahman