நடிகர்கள் ரமணா, நந்தா  இணைந்து உருவாக்கியுள்ள தயாரிப்பு நிறுவனமான ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாராகும் முதல் தயாரிப்பான விஷால் நடிக்கும் 32வது படத்திற்கு ‘லத்தி சார்ஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படத்தைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமானது. 

விஷால் நடித்துள்ள ‘எனிமி’ படம் அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதற்கடுத்து ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ளார். இதன் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது.  இதற்கடுத்து ‘லத்தி சார்ஜ்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

விஷால் ஜோடியாக சுனைனா நடிக்க பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வினோத்குமார் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்திற்கு இசை சாம் சிஎஸ், ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம்.