தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ ஆரம்பம்

18 Oct 2021

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது.

யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, புவன் சீனிவாசன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 

“காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன” ஆகிய படங்களுக்குப் பிறகு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் இது.

சுமார் 10 வருட இடைவெளிக்குப் பிறகு அண்ணன், தம்பி இருவரும் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள்.

செல்ராகவன், யுவன், தனுஷ் கூட்டணி 2006ம் ஆண்டில் வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படத்திற்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து மீண்டும் இணைகிறது.

Tags: naane varuven, selvarahavan, yuvan shankar raja, dhanush, indhuja

Share via: