அதர்வா நடிக்கும் ‘அட்ரஸ்’ படப்பிடிப்பு நிறைவு

17 Oct 2021

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் படம் ‘அட்ரஸ்’.

“குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன்” படங்களை   இயக்கிய ராஜாமோகன் இப்படத்தை இயக்குகிறார்.

1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிகிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. 

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை த்ரில்லர் படமாகக் கொடுக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இப்படத்தில் புரட்சிகரமான ‘காளி’ என்ற ஒரு கதாபாத்திரத்தில் அதர்வா, நட்புக்காக நடித்திருக்கிறார். இவரது ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார்.

இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி,  ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன்,  கோலிசோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘மெரீனா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண்’ படங்களுக்கு இசை அமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு, மலையும், மலை சார்ந்த பகுதிகளில் நடைபெற்றது. கொடைக்கானலில் இருந்து 8 கிலோமீட்டர் நடந்து சென்று வெள்ளக் கவி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தி உள்ளார்கள். 

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், ஆடியோ வெளியாக உள்ளது. 

Tags: atharva, address, rajamohan

Share via: