பரபரப்பை ஏற்படுத்தும் ‘ஜெய் பீம்’ டீசர்

15 Oct 2021

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், தசெ ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில் சூர்யா, ரஜிஷா விஜயன், லிஜோமோள் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ்,  மற்றும் பலர் நடிக்கும் படம் ஜெய் பீம்.

இப்படத்தின் டீசர் இன்று யூ டியூபில் வெளியிடப்பட்டது.

நீதிமன்ற வழக்காடலை மையமாகக் கொண்ட இந்தப் படம்  உலகம் முழுவதும் 240 நாடுகளில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசனின் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

தங்களுக்கென சொந்தமாக நிலம் இல்லாத, தலைக்கு மேல் ஒழுங்காக ஒரு கூரையில்லாத, ஆனால் எளிமையில் சந்தோஷம் காணும் ஒடுக்கப்பட்ட அப்பவிப் பழங்குடி மக்களின் கடின உழைப்பு நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய கதையை ‘ஜெய் பீம்’ விவரிக்கிறது.

சமூக அநீதியும், மனிதர்களின் மிருகத்தன்மையும் இந்த அப்பாவி உயிர்களை பாதிக்க, வழக்கறிஞர் சந்துரு இவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறார். விறுவிறுப்பான, மிகத் தீவிரமான ஒரு கதைக்கரு மனதைப் பிசையும், அதே சமயம் நெகிழவும் செய்யும் ஒரு களத்தில் இப்படம் சொல்லப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டத்தை இன்று வெளியான டீஸர் காட்டியுள்ளது. 

வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யாவின் தோற்றம் மிக நேர்த்தியாக இருக்கிறது. 

இப்படத்தை சூர்யா, ஜோதிகா தயாரிக்க, இணைதயாரிப்பை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கவனிக்க, ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர், படத்தொகுப்பு ஃபிலோமின் ராஜ், கலை இயக்கம் கதிர்.

Tags: jai bhim suriya, tha se gnanavel, sean roldan

Share via: