கேஜேஆர் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம்
08 Jul 2025
பிரபல தயாரிப்பாளர் கே.ஜே.ஆர், ‘அங்கீகாரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாக உள்ளார். தற்போது மினி ஸ்டுடியோ நிறுவனத்தின் ‘புரொடக்ஷன் நம்பர் 15’ என்ற பெயரிடப்படாத புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ‘விலங்கு’ வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரீகன் ஸ்டானிஸ்லாஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் கே.ஜே.ஆர் உடன் அர்ஜுன் அசோகன், ஸ்ரீதேவி, சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் குமார், பிருத்விராஜ், இந்துமதி, அஸ்வின் கே. குமார், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அஜூ வர்கீஸ், ஸ்ரீகாந்த் முரளி ஆகியோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை பி.வி. சங்கர் கையாள, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். ‘மார்க் ஆண்டனி’ படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோ சார்பில் எஸ். வினோத்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும், கே.ஜே.ஆர் நடித்த ‘அங்கீகாரம்’ படத்தின் பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, அவரது இரண்டாவது படமாக இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
Tags: kjr