ஹம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கேஜிஎப் 2’.

இப்படம் நாளை உலகம் முழுவதும் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

ஒரு கன்னடப் படம் இதுவரையிலும் இந்த அளவிற்கு வெளியானதில்லை என்று சொல்லுமளவிற்கு உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது.

கேஜிஎப் படத்தின் முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பு தான் இதற்கு முக்கிய காரணம். அதனால், இரண்டாம் பாகத்தில் ஹிந்தி நடிகரான சஞ்சய் தத், நடிகையான ரவீனா டாண்டன் ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார்கள்.

படத்திற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றி வந்ததும் படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்திய சினிமாவின் முந்தைய வசூல் சாதனைகளை இப்படம் முறியடிக்கும் என்று இந்தியத் திரையுலகில் உள்ள ஒவ்வொருவரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.