வீட்டை மருத்துவமனையாக மாற்ற அனுமதி கோரும் கமல்ஹாசன்
25 Mar 2020
தமிழ்நாட்டிலும் கொரானோ வைரஸ் அச்சம் மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது. இந்தியப் பிரதமர் அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கிற்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதனிடையே மக்களுக்கு சரியான மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வீட்டை மருத்துமனையாக மாற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து டிவிட்டரில், “இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த கோரிக்கைக்கு அரசு அனுமதி அளிக்குமா ?. அப்படி அளித்தால் இன்னும் இது போல் பலர் தங்களது இடங்களைத் தர மு
Tags: kamalhaasan, makkal needhi maiam