யு டியூப் - டாப் 10 தமிழ் சினிமா பாடல்கள்
23 Mar 2020
இன்றைய இணைய உலகில் யு டியூப் வீடியோ வலைதளத்திற்கு தனிப் பெரும் வரவேற்பு இருக்கிறது.
பல்வேறு தரப்பினரும் அதை வெகுவாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் யு டியுபில் புதிய சாதனையைப் படைத்த பிறகு யு டியூபை பயன்படுத்துவது அதிகமானது.
அந்தப் பாடலை மொழி வித்தியாசம் இல்லாமல் உலகில் உள்ள பலரும் பார்த்து ரசித்தனர். முதல் முறையாக ஒரு தமிழ் சினிமா பாடல் 1 கோடி பார்வையைக் கடந்து முதல் சாதனையைப் படைத்தது. தற்போது 21 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
இப்போது ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் 80 கோடி பார்வைகளைக் கடந்து மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்தது.
தமிழ் சினிமா பாடல்களில் இதுவரையில் 9 பாடல்கள்தான் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ள பாடல்களாக இருக்கின்றன.
அந்தப் பாடல்களை கீழே காணலாம்...
1. மாரி 2 - ரௌடி பேபி...
2. 3 - ஒய் திஸ் கொலவெறி...
3. கனா - வாயாடி பெத்த புள்ள...
4. குலேபகாவலி - குலேபா...
5. சார்லி சாப்ளின் 2 - சின்ன மச்சான்...
6. பேட்ட - மரணமாஸ்...
7. மெர்சல் - ஆளப் போறான் தமிழன்...
8. விஸ்வாசம் - கண்ணான கண்ணே...
9. மாரி - டானு..டானு..
10. நம்ம வீட்டுப் பிள்ளை - காந்தக் கண்ணழகி...
Tags: you tube, tamil cinema, most viewed tamil cinema songs