சுஷாந்த் சிங் நடித்த ‘தில் பேச்சரா’ டிரைலர் உலக சாதனை

07 Jul 2020

மறைந்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த படம் ‘தில் பேச்சரா’. 

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், முகேஷ் சாப்ரா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் ஜான் கிரீன் எழுதி அதிகம் விற்கப்பட்ட ஆங்கி நாவலான ‘தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’ (The Fault in Our Stars)-ஐ தழுவி எடுக்கப்பட்ட படம்.

இப்படத்தின் டிரைலர் நேற்று ஜுலை 6ம் தேதி யு டியுபில் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே இப்படத்தின் டிரைலருக்கு யு டியூபில் ரசிகர்களின் லைக்குகள் கொட்டியது.

24 மணி நேரத்திற்குள்ளாக 50 லட்சம் லைக்குகளைக் கடந்து உலகிலேயே 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளைப் பெற்ற திரைப்படி டிரைலர் என்ற சாதனையைப் படைத்தது.

மேலும், 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளுடன் யு டியூபில் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு முன் உலக அளவில் திரைப்பட டிரைலர்களில் அதிக லைக்குகளைப் பெற்ற ‘அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ டிரைலரின் சாதனையை (36 லட்சம்) முறியடித்துவிட்டது. இந்த லைக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

‘தில் பேச்சரா’ டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், “சுஷாந்திற்கும், தில் பேச்சரா படத்திற்கும் அன்பு மழை பொழிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜுலை 24ம் தேதி இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இலவசமாக ஒளிபரப்பாக உள்ளது. 

Tags: Dil Bechara, Sushanth Singh Rajput, AR Rahman

Share via: