விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ முதல் பார்வை வெளியீடு

08 Jul 2020

விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தை இணைந்து தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார், விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா  நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஒரு படம் ஆகியவற்றுடன் விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தையும் தயாரித்து வருகிறார்.

அரசியல் சார்ந்த கதையாக உருவாகி வரும் இப்படத்தின் மூலம் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குனராக அறிமுகமாகிறார். 

பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி, பார்த்திகன் இப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

அதிதிராவ் ஹைதரி, மஞ்சிமா மோகன் இப்படத்தின் கதாநாயகிகளாக நடிக்க கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டது. கொரானோ அச்சம் முடிந்தவுடன் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும். 

கோவிந்த் வசந்தா இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

‘துக்ளக் தர்பார்’ படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் அதற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags: Tughlaq Durbar, Vijay Sethupathi

Share via: