தனுஷ் 54, பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்
11 Jul 2025
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், நிறுவனத் தலைவர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பல், தனுஷ் நடிக்கும் D 54-படம் பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.
‘போர் தொழில்’ திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாக உள்ளது.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்து நடிக்க உள்ளார். மற்றும் கேஎஸ் ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு மாய பாண்டி மற்றும் காஸ்டியூம் தினேஷ் மனோகர் & காவியா ஸ்ரீராம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
இந்தியாவின் பல இடங்களில், தீவிரமான கதைக்களத்தில், ஸ்டைலான ஆக்சன் திரில்லராக பிரம்மாண்டமாக படமாக்கப்படுகிறது.
இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
Tags: dhanush, vignesh raja, mamita baiju