தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்" இன்று ஆரம்பம்
22 Sep 2022
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடிக்கும் “கேப்டன் மில்லர்” படம் பூஜையுடன் இனிதே துவங்கியது.
இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் குமார் (இசை), மதன் கார்க்கி (வசனம்), ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), T. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (ஆக்சன்), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.
“கேப்டன் மில்லர்” படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.
“ராக்கி, சாணி காயிதம்” படங்களுக்குப் பிறகு மூலம் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படம் இது.
1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
Tags: Captain miller, dhanush, priyanka mohan, arun matheswaran, gv prakash kumar