சவால்களை கொண்ட படம் 'பிளாக்மெயில்' - நடிகை தேஜூ அஸ்வினி

23 Jul 2025

மு. மாறன் இயக்க ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘பிளாக் மெயில்’ படத்தில் நடித்திருக்கிறார் நடிகை தேஜு அஸ்வினி. இந்தப் படம் ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க இருக்கிறார்கள். 

'படாக் படாக்' மியூசிக் வீடியோ பாடலில் ஜிவி பிரகாஷ்குமார்- தேஜூ அஸ்வினி இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.  அந்த ஜோடி இந்தப் படம் மூலம் சினிமாவில் இணைந்துள்ளது. எனர்ஜிடிக் மற்றும் யூத்ஃபுல் கதாபாத்திரத்தில் மட்டுமே இதுவரை பார்த்திருந்த தேஜூ அஸ்வினி முதல் முறையாக சீரியஸான பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

"வழக்கமான நடிப்பைத் தாண்டி பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க 'பிளாக்மெயில்' திரைப்படம் இடம் கொடுத்தது. புதுவிதமான அனுபவமாக இது அமைந்தது. இயக்குநர் மு. மாறன் அவர்களின் முந்திய படங்களான 'கண்ணை நம்பாதே', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். 'பிளாக்மெயில்' படத்தில் என்னை கதாநாயகியாக கேட்ட போது நிச்சயம் நடிப்பை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரமாக அமையும் என்ற நம்பிக்கையில் சம்மதித்தேன்" என்றார்.

ஜிவி பிரகாஷ்குமாருடன் நடித்தது பற்றி அவர் கூறுகையில், "ஜிவி பிரகாஷ் சாருடன் இதற்கு முன்பு கலர்ஃபுல்லான மியூசிக் வீடியோ ஒன்றில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், இந்தப் படம் முற்றிலும் அதற்கு நேரெதிரானது. தொழில்நுட்ப ரீதியாகவும் கதை சொல்லல் மற்றும் எதிர்பாராத திருப்புமுனை மூலம் படம் ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை பார்வையாளர்களை நிச்சயம் கட்டிப்போடும்" என்றார்.

Tags: blackmail, teju ashwini, gr prakashkumar

Share via: